×

அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை புறக்கணிப்பது நல்லது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை புறக்கணிப்பது நல்லது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் கர்கா சட்டர்ஜி, தன் மீது அசாம் அரசு பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தன்னை கைது செய்வதிலிருந்து பாதுகாப்புக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் கோபப்படக் கூடாது.

அவற்றில் சிலவற்றை புறக்கணிப்பது நல்லது. நீதிபதிகள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரம் அவற்றை புறக்கணிக்கக் கூடாது. இதுபோன்ற விஷயங்களுக்கு பதில் சொல்லவில்லை என்றால், நம்முடைய வேலையை செய்ய முடியாது. இந்த காலத்தில் விமர்சனங்கள் என்பது பொதுவான நடைமுறையாகிவிட்டது. எனவே சில விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல் அமைதியாக இருப்பதே சரியாக இருக்கும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

The post அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை புறக்கணிப்பது நல்லது: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Karka Chatterjee ,West Bengal ,Assam government ,
× RELATED வாக்காளர் ரகசியம் மீறப்படுவதாக...